காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 4000 பேர் பங்கேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாரம்பரிய விளையாட்டுக்களை இளைய
தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் விதமாக விழிப்புணர்வு மாரத்தான்
போட்டி நடைபெற்றது. மாரத்தான் ஆரம்பிக்கும் முன்னதாக சிறுவர், சிறுமியர்ககளின் தமிழக பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், தப்பாட்டம், புலியாட்டம், பொய்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போட்டி பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர்கள் என
நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், சிறுவர், சிறுமிகளுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் தொடங்கிய போட்டி நகரின் முக்கிய விதிகளின் வழியாக சுற்றி மீண்டும் அழகப்பா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது. சுமார் 4000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும், புத்தகங்களும் வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
-ம. ஸ்ரீ மரகதம்