சென்னை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்பு..!

சென்னையில் உற்சாகமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் புகாரி உணவகம் முதல் ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பு…

சென்னையில் உற்சாகமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் புகாரி உணவகம் முதல் ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பு வரை போக்குவரத்து இல்லாமல் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தொடங்கி
காலை 9 மணி வரை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், ராப் சிங்கிங் மற்றும் மியூசிக்கல் டிஜே உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதேபோல் சென்னையின் முக்கியமான சுற்றுலா பகுதிகளை கோலங்கள் மூலம் வண்ணம் தீட்டி வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக நொண்டி தாண்டுதல், டயர் ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், கால் பந்தாட்டம், உள்ளிட்ட விளையாட்டுகளையும் ஹாப்பி ஸ்ரிட்டுக்கு வருகை புரிந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினர்.

இந்த நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு ஹேப்பி ஸ்ட்ரீட்டில் அமைக்கப்பட்ட அனைத்து
விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். பின்னர் எம்பி தயாநிதி மாறன் மேடையில் பேசியதாவது:

”அண்ணா சாலை மிகவும் பரபரப்பான ஒரு முக்கிய சாலை. இங்கு வாகனங்கள் அதிக அளவில் செல்வதை நான் பலமுறை பார்த்துள்ளேன். ஆனால் தற்பொழுது வாகனங்கள் எதுவும் இல்லாமல் இந்த சாலையை மகிழ்ச்சி சாலையாக மாற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.