“பியார் பிரேமா காதல்” படக்கூட்டணியுடன் இணையும் கவின்… நாளை வெளியாகும் படத்தின் தலைப்பு…!

பியார் பிரேமா காதல் பட இயக்குநரின் அடுத்த படைப்பில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஒய்எஸ்ஆர் ஃபிளிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா…

பியார் பிரேமா காதல் பட இயக்குநரின் அடுத்த படைப்பில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஒய்எஸ்ஆர் ஃபிளிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா வில்சன் இணைந்து நடித்த படம் பியார் பிரேமா காதல். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எலன் இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்ப்பே இல்லாமல் இயக்குநருக்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதன்பின்னர், சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசனின் தோற்றம் தளபதி ரஜினிகாந்தின் தோற்றம் மற்றும் ஷாருக்கான் போன்ற மூத்த நடிகர்களின் தோற்றத்தில் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்திற்கான பல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அந்த படமும் எலன் இயக்கத்தில் உருவாக உள்ளதாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் அதன் பின் எந்த அப்டேட்டும் வரவில்லை. மேலும் ஒரு சில அறிக்கைகளில் படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன்பின்னர் எலன் இந்த படத்தின் கதையை மாற்ற உள்ளதாகவும், படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு பதிலாக நடிகர் கவின் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

https://twitter.com/thisisysr/status/1695775814988730841

இந்நிலையில் இன்று இந்த செய்தியை படக்குழு உறுதி செய்துள்ளது. அது வைரலாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் யுவன் சங்கர் ராஜா, கவின் மற்றும் இயக்குநர் எலன் மூவரும் இருக்கும் படி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு போஸ்டர் மூலம் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.