“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என திமுக எம்.பி திருச்சி சிவா மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திருச்சி சிவா அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 49 கேந்திரிய பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் தமிழ் மாணவர்கள் படிக்க முடியாதா சூழல் உள்ளது. இது குறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியபோது, கல்வி அமைச்சகம் பரிசீலனை செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் மட்டுமே உள்ளது.”
“12ம் வகுப்பில் இரண்டாம் மொழியாக தாய்மொழிக்குப் பதில், “Applied mathematics” எனும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்காக மாணவர்கள் தாய்மொழியை புறக்கணிக்க நேரிடும்” என்று மத்திய கல்வி அமைச்சருடனான சந்திப்பின்போது வலிறுத்தியுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மேலும், “கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறை செயலாளரை சந்தித்து தமிழ் மொழி மேற்குறிப்பிட்ட பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். கொள்கை அளவிலான முடிவு என்பதால், நிச்சயம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் உட்பட அமைச்சர்கள் எவரும் தமிழ் உள்ளிட மாநில மொழிக்கு எதிரி இல்லை அமைச்சர் கூறியுள்ளார்.” என சிவா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: