முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தல் தோல்வி குறித்த கருத்து எனது சொந்த கருத்து; சி.வி.சண்முகம்

தேர்தல் தோல்விக்கு குறித்த கருத்து எனது தனிப்பட்ட கருத்து என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதேசமயத்தில், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக தேர்தலை சந்தித்தது. முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என கூறினார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த ராகவன் உள்ளிட்ட பலரும் எதிர் கருத்து தெரித்தனர்.

இதைத்தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி தொடர்வதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறித்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் தோல்வி குறித்து தான் கூறிய கருத்து சொந்த கருத்து என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

Gayathri Venkatesan

ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

Jeba Arul Robinson

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Saravana Kumar