தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருந்தும் இதை முழுவதுமாக கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 2,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 33 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 71 ஆயிரத்து 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 137 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 131 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டில் 124 பேருக்கும் ஈரோட்டில் 143 பேருக்கும் சேலத்தில் 163 பேருக்கும் கோவையில் 241 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.








