மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான மழை பெய்துள்ளது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால்…

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான மழை பெய்துள்ளது.

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பான மழையின் அளவைவிட 94 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை
ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கேரளவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகத்தின் வளிமண்டலப் பகுதியில் மத்தியப் பகுதியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது. இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. 10 இடங்களில் கன மழையும், நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்குக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். எனவே மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரண்டு தினங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த
ஜூன் 1 முதல் இன்று வரை உள்ள காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு 242 மில்லி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 125 மில்லி மீட்டர். இது இயல்பான மழையின் அளவைவிட 94 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளது. மேலும், சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவி நீண்ட
நாட்களாக பழுதடைந்து இருந்த நிலையில் நாளை முதல் புதுப்பிக்கும் பணி
தொடங்குகிறது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.