பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டுவரும் நமது நியூஸ் 7 தமிழ் அதற்கேற்ப மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்தி வருகிறோம்.
சமூகத்தில் முக்கிய அங்கமாக இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுகிறது நியூஸ் 7 தமிழ். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் மாணவ ஊடகவியாளலர் பயிற்சி திட்டம். கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும்போதே மாணவர்களுக்கு பயிற்சியுடன் ஊக்க தொகையும் கொடுத்துள்ளது. ஊடக உலகில் முதல் முறையாக இந்த முன்னெடுப்பை நியூஸ் 7 தமிழ் தொடங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறோம்.
நமது நியூஸ்7தமிழின் மாணவ ஊடகவியாலாளர் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் 1153 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 மண்டலங்களாக அவர்களுக்கான நேர்முக தேர்வினை நடத்தி அதில் இருந்து 44 மாணவர்களை நாம் தேர்வு செய்தோம்.
பயிற்சி தொடக்கத்திலேயே பொதுமுடக்கம் அதற்கு அடுத்து ஜல்லிக்கட்டு, உள்ளாட்சித் தேர்தல், சித்திரை திருவிழா என அனைத்து பொது நிகழ்வுகளிலும் எங்களின் மாணவ ஊடகவியலாளர்கள் களத்தில் நின்று வென்று காட்டி இருக்கின்றனர். இந்த மாணவ ஊடகவியலாளர் திட்டத்தில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவர்களில் 18 பேருக்கு சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாணவ ஊடகவியலாளர் பயிற்சி திட்டத்தில் இணைத்து பணியாற்றிய அனைவருக்கும் பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என நெஞ்சம் நிறைந்து வாழ்த்துக்கிறோம்.







