புற்றுநோய் பாதிப்பில் தமிழ்நாடு 5வது இடம்- மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2022ம் ஆண்டில் நாட்டில் 5.2% அளவுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர்…

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2022ம் ஆண்டில் நாட்டில் 5.2% அளவுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் 2022 டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி உள்ள மொத்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பாகவும்? குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் இந்தியாவில் அதிகரித்து வருகிறதா? என்றும் புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என்றும் எழுத்த பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கடந்த 2022ம் ஆண்டில் நாடு முழுவதும் 14,61,427 புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 93,536 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக பட்சமாக உத்திர பிரதேசம் மாநிலத்தில் 2,10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் அதிக பாதிப்பு உள்ள 5வது மாநிலமாக தமிழகம் உள்ளது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோயால் 2020ம் ஆண்டில் 98,278 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 1 லட்சத்து 792 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 2022ம் ஆண்டில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022ம் ஆண்டில் 5.2% பேர் நுரையீரல் புற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.