முக்கியச் செய்திகள் தமிழகம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை சேர்ந்த, 9 பேரை கேரள என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் நேற்று கைது செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேராள மாநிலம் விளஞ்சியம் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்து அவர்கள் படகிலிருந்த சுமார் 300 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவர்களிடம் மேற்கொண்டதில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதாக தெரியவந்தது. மேலும் திருச்சி மத்திய சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவர்களை தங்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் உள்ளவர்களும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து என்ஐஏ ஜூலை 8-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களான குணசேகரன், புஷ்பராஜா மற்றும் ஆயுதங்கள், போதைப் பொருள் விற்பனையாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், கமாண்டோ படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். அப்போது, சிறப்பு முகாமிலிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்ற என்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எஸ்.பி. தர்மராஜ் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் 8 பேர் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்து, அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜா, முகமது ஆஸ்மின், கோட்டாகாமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, தனுக்காராஜன், லாடியா, வெள்ளசாரங்கா, திலீப் ஆகிய 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஏற்கெனவே தொடரப்பட்ட ஆயுதக் கடத்தல் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதால், 9 பேரையும் கைது செய்ய வந்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் என்ஐஏ எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியர் பிரதீப்குமாருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, 9 பேர் மீதுள்ள வழக்கு விவரங்கள், கைது செய்வதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி ஆட்சியர் கேட்டார்.

என்ஐஏ அதிகாரிகள் அளித்த ஆவணங்களை ஏற்று, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து சிறப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்ல ஆட்சியர் அனுமதியளித்தார். இதையடுத்து, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் இலங்கையை சேர்ந்த 9பேரை காவல்துறை பாதுகாப்போடு கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5க்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டுனர்.

கடந்த 2020மார்ச் மாதம் கேராளா விளஞ்சியம் கடற்பகுதியில் சந்தேகத்தில் இடமாக கைது செய்யப்பட்ட படகிலிருந்து 300கிலோ 323கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்து இதில் ஈடுபட்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

மேற்கொண்ட விசாரணையில் விடுதலைப் புலிகளை தொடர்புடைய சிலர் ஈடுபட்டுவதாக தெரிந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளவர்களும் தொடர்பு இருப்பதாக தெரிந்ததை தொடர்ந்து கடந்த ஜீலை மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு என்.ஜ.ஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் உதவியுடன் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவர்களை சோதனை செய்ததில் சில ஆவணங்கள், தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து சிலரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல தேசிய புலனாய் முகமையின் கண்காணிப்பாளர் தர்மராஜ் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து சுமார் 3மணி அளவில் கண்காணிப்பாளர் தர்மராஜ் மாவட்ட ஆட்சியிரிடம் இருந்து 9பேரை கைது செய்வதற்கான ஆலோசனை மேற்கொண்டு பின்னர் சிறப்பு முகாமிற்கு வந்தார். முகாமில் இருந்து குணசேகரன், புஷ்பராஜ், முகமதுஆஸ்மின், கோட்டாகாமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ, தனுக்காராஜன், லாடியா, வெள்ளசாரங்கா, திலீப் ஆகிய 9பேரை கைது செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட 9பேரை சென்னை பூந்தமல்லி உள்ள NIA நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது- அண்ணாமலை

G SaravanaKumar

பெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்

Halley Karthik

விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும்; உயர்நீதி மன்றம்

Halley Karthik