முட்டை விலை தொடர் உயர்ந்து வருவது ஏன்? கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி!

முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி அளித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் நியூஸ்…

முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் நியூஸ் 7 தமிழ்-க்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் “நாமக்கல் மண்டலத்தில் கடந்த 12 நாட்களில் முட்டை விலை 75 காசுகள் உயர்ந்துள்ளது.  முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  வரும் நாட்களில் முட்டை விலை 5.75 ஆக உயர வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ்,  புத்தாண்டு பண்டிகையொட்டி கேக் ஆர்டர்க்காக முட்டை தேவை அதிகரித்துள்ளது” என்றார் .

மேலும் “தொடர்ந்து வங்கதேசம்,  இலங்கை,  அரபு நாடுகளுக்கு தினசரி 30 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  வட மாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளதால் கூடுதலாக முட்டை அனுப்பி வருகின்றோம்.  தேவை அதிகரித்துள்ளதால் முட்டை உற்பத்தி பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.