செஸ் ஒலிம்பியாட்-பிரக்ஞானந்தா வெற்றி

எஸ்டோனியா அணிக்கு எதிராக இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, தானியா உள்ளிட்ட…

எஸ்டோனியா அணிக்கு எதிராக இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, தானியா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய பிரத்தியானந்தா 41 வது நகரத்தில் வெற்றி கண்டார்.

இந்திய சி பிரிவு வீராங்கனை பிரத்யுஷா போடா ஆட்டம் டிரா ஆனது. சிங்கப்பூர் வீராங்கனை யாங் ஹசேல் உடனான ஆட்டம் டிரா ஆனது. டிரா ஆனதால் இருவருக்கும் தலா அரை புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மகளிர் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தானியா வெற்றி வென்றார். அர்ஜெண்டின வீராங்கனை போர்டா ரோடாஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

வெள்ளை காய்களுடன் களம் இறங்கிய தனியா 36வது நகர்த்தலில் வெற்றியை பதிவு செய்தார்.  இந்தியா A அணி வீரர்கள் ஹரிகிருஷ்ணா, நாராயணன் ஆகிய இருவரும் மால்டோவா அணிக்கு எதிராக வெற்றி பெற்றனர்.

இந்திய ஓபன் B அணியினர் மூன்று வெற்றிகளை பெற்று, எஸ்டோனியாவை வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.