பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணை பதிவை மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
8 வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க கோரி ராஜகோபாலன் வழக்கில் நீதிபதி டீக்கா ராமன் உத்தரவு பிறப்பித்தார்.
தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று ராஜகோபாலன் தாக்கல் செய்த மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ராஜகோபலன் மீதான 8 வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தது எப்போது? குற்றச்சம்பவம் நடந்தது எப்போது? வழக்குப்பதிவு செய்தது எப்போது? போன்ற விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, ஆகஸ்டு 11 ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்குகள் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, தபால்காரரை போல மாஜிஸ்திரேட்டுகள் செயல்பட கூடாது.
புகார் மனு தாக்கல் செய்யும்போது, அதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.








