நீட் விவகாரத்தில் அதிமுக – பாஜகவின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்ற நினைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
குற்றம் உள்ள மனது குறுகுறுப்பதால்தான் அ.தி.மு.க.வும்- பா.ஜ.க.வும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விமர்சித்துள்ள துரைமுருகன், தமிழ்நாடு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: பேருந்தை வழிமறித்து வம்பு செய்த யானை: வைரலாகும் வீடியோ
அதிமுக – பாஜக-வின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்களும், மாணவர் சமுதாயமும் இணைந்து, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







