ராமானுஜரின் சமத்துவ சிலையை திறந்து வைத்தார் பிரதமர்

ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும்…

ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

இந்த விழாவில், ஆசிரம துறவிகள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோ கலந்துக்கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்வுக்கு விமானம் மூலம் தெலங்கான வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வரவில்லை.

பிரதமரை வரவேற்காமல் முதலமைச்சர் புறக்கணித்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இதே போன்ற ஒரு விழாவில் பிரதமரின் வருகையை சந்திரசேகர் ராவ் புறக்கணித்திருந்தார்.

ரூ.1,000 கோடி மதிப்பில் எழுப்பப்பட்டுள்ள இந்த சிலையானது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சிலையாகும். இந்த சிலை தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.