பேருந்தை வழிமறித்து வம்பு செய்த யானை: வைரலாகும் வீடியோ

கோவை அருகே பேருந்தை நோக்கி வந்த காட்டுயானையை, பயணிகள் அன்பாக விரட்ட, அதை கேட்டு யானையும் திரும்பி சென்ற காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு, கோவையில் இருந்து அரசு பேருந்து…

கோவை அருகே பேருந்தை நோக்கி வந்த காட்டுயானையை, பயணிகள் அன்பாக விரட்ட, அதை கேட்டு யானையும் திரும்பி சென்ற காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு, கோவையில் இருந்து அரசு பேருந்து சென்றது. தூமனூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று சாலையை கடந்தது. அப்போது, பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதும், யானை பேருந்தை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், யானையை பார்த்து போ…போ.. என சத்தமிட்டனர். இதைகேட்டு. காட்டு யானையும் வேகத்தை குறைத்து அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றது.

அண்மைச் செய்தி: லாவகமாக பாம்பு பிடிக்கும், பெண் வனத்துறை அதிகாரி: வைரலாகும் வீடியோ

இந்த காட்சிகளை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதையடுத்து, அது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.