மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6-ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம்…

தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6-ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி, சட்டப்பேரவை மீண்டும் கூட இருப்பதாகக் தெரிவித்த அவர், அன்று முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது எப்போது விவாதம் என்பது குறித்து வரும் 30-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை – மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார்

மேலும், தன்னை புகழ்ந்து பேசுவதை ரசிக்கவும், எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சிப்பதையும் முதலமைச்சர் விரும்ப மாட்டார் என்றும், நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற விவரத்தை விரைவில் தெரிவிப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.