முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் 2000 முதல் 4000 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது விண்ணைமுட்டும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை தமிழர்கள் பலர் கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகத் தொடங்கியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி கடந்த 22ம் தேதி கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட நான்கு மாத கைகுழந்தையுடன் 5 பேர் ஒரு பைப்பர் படகில் தனுஸ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். விஷயம் அறிந்து விரைந்த கடலோர காவல் படையினர் தஞ்சம் புகுந்தவர்களை மீட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், 5 குழந்தைகள் உட்பட 10 பேர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தப்போது, இலங்கையில் இனி வாழ்வது கடினம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே வழி இல்லாத அளவிற்கு விலை உயர்வு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தங்களை போல் இன்னும் பல குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் 2000 முதல் 4000 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரும் இந்த சமயத்தில் தீவிரவாத ஊடுறுவல்களை தடுப்பதற்காக கடலோர் பாதுகாப்பு குழு  கண்காணிப்பை தீவிரப்படுத்தயுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!

Gayathri Venkatesan

நிவாரண நிதி மூலம் ரூ.472 கோடி வசூல்: அமைச்சர் தகவல்

Halley Karthik

கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததாலேயே, திமுக கூட்டுகிறது! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Nandhakumar