“நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை”

நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் நாட்டாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து…

நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் நாட்டாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெற்றதா? என்று மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

அண்மைச் செய்தி: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் படி “நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி” தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுபட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.