இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீண்ட வரலாற்றை கொண்டது திருப்பத்தூர். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. சோழ விஜய நகர் ஹோய்சாலப் மன்னர்கள் ஆண்ட பகுதி என்பது வரலாறு. எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு முழுமையாக குணமடையாததால் மருத்துவர் ஆலோசனைபடி ஏற்கெனவே திட்டமிட்ட தேதியில் உங்களை சந்திக்க முடியவில்லை. மருந்து மாத்திரையை விட உங்களை சந்தித்த உடன் எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. சில தாய்மார்கள் என் கையை பிடித்து உடம்பு எப்படி இருக்கின்றது என கேட்டார்கள் எனக்கு மெய்சிலிர்த்தது. ஏழையின் சிரிப்பை கானும் போது நாம் உற்சாகமாகின்றோம் அது தான் உண்மை.
புதிய திட்டங்கள்
14,820 குடும்பங்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்படுகிறது. ரூ.109 கோடியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது. குறித்த காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது தான் சிறப்பு. வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலகம், சமுதாய கூடம், கல்லூரி விடுதிகள், 16 சுகாதார நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. புதிதாக தொழிற்பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் நிகழ்ச்சி வைப்பார்கள். ஆனால் நாங்கள் ஒரே நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்து உள்ளோம். ஒரு ஒரு திட்டத்திற்கும் நிகழ்ச்சி வைத்தாம் என்றால் 365 நாட்களுக்கும் நாங்கள் நிகழ்ச்சி தான் வைக்க வேண்டும். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இம்மாவட்டத்திக் 196 உயிர்கள் காக்கப்பட்டு உள்ளது.
நான்கு கிராமங்களில் பாம்பாற்றின் மீது பாலம் அமைக்கப்படும். ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தலம் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. ஜலகம்பாறை அறுவியில் பல திட்டபணிக்கு வனத்துறை அனுப்பி உள்ள கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்படும். உயர்கல்வி பயில புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்று கூறினார்.
முன்னோடி மாநிலம்
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சமூக நீதி தத்துவத்தை 1920ம் ஆண்டே தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது. பாஜகவை தவிர அனைத்து மாநில முதல்வர்களும் சமூக நீதிக்கு குரல் கொடுக்கின்றனர். பெரும்பாலான மாநில அரசுகளுக்கு சமூக நீதி பேசும் வழிகாட்டுதலாக தமிழ்நாடு உள்ளது என்பதை கம்பீரத்துடன் கூறலாம் என்று தெரிவித்தார்.
நவீன தமிழ்நாடு
கலைஞரின் திட்டத்தால் உருவானது தான் நவீன தமிழ்நாடு. திமுக தனது எல்லையை தமிழ்நாடு சுருக்கி கொண்டாலும் இந்தியா முழுவதும் அவர்கள் திட்டம் பேசப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் அன்றே எழுதி உள்ளார்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம்
அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பது முக்கியமானதாக கருதுகிறேன். தனி மனிதன் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறோம். இது தான் திராவிட மாடல் ஆட்சியில் இலக்கணம். ஒவ்வொரு குடும்பமும் வளம் பெற பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். அவர்கள் வேலைக்காக தான் நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
சக்தியை மீறி உழைக்கிறேன்
உங்கள் வாழ்வு உயர தமிழ்நாடு உயரும். நான் என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன். நான் மட்டும் இல்லை அமைச்சர்களும், அதிகாரிகளும் அப்படித்தான் உழைத்து வருகிறோம். இந்த பொற்கால ஆட்சியை தொடர்வோம். இந்தியாவுக்கு முன் மாதியான ஆட்சியாக மலர செய்வோம் என்று குறிப்பிட்டார்.