கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இப்படத்தில், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
https://twitter.com/disneyplusHSTam/status/1542017780907737090?t=L_1doota2pRn-weYTu9R2Q&s=08
இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ள நிலையில், அதிக வசூலைப் பெற்ற தமிழ் படங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இப்படம் ஜூலை 8ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக புதிய ப்ரோமோவுடன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-ம.பவித்ரா







