இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ் நாடு தான் முதலிடம் -அமைச்சர் ராமச்சந்திரன்

இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ் நாடு தான் முதலிடம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவையில் வாலங்குளம் படகை இல்லம் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இடங்களில்…

இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ் நாடு தான் முதலிடம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவையில் வாலங்குளம் படகை இல்லம்
காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இடங்களில் ஆய்வு
மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக அரசை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை முதலில் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

அத்துடன், ஒவ்வொரு துறைக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இயற்கை சுற்றுலாத்துறைக்கு  வரப்பிரசாதமாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கோவில்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பயணிகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர்.  கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டில் 12 லட்சத்து ஐம்பதாயிரம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அவர்களின் இங்குள்ள கோவில்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று பாரம்பரிய கலைநயத்தை ஆர்வத்தோடு கண்டு களித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வருகை தந்துள்ளனர். எனவே தமிழகம் தான் இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

அத்துடன், நான் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றுலாத்துறை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றேன். கோவை மாவட்டத்தில் பொழுதுபோக்கு இடமில்லை. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாடர்ன் கோட்டில் ஸ்பீட் போட் விடுவது குறித்து ஆய்வு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். படகு இல்லம் குறித்து மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல ஊட்டியில் உள்ள படகை இல்லம். பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் என்ன மற்றும் மேம்பாடுகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது விரைவில் சுற்றுலாத் துறையில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் மூன்று வகையான படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.