பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு ; பாஜகவால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை…? – முதலமைச்சர் ஸ்டாலின்…..!

தமிழ்நாடு தான் இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொமி உள்ளிட்டோரும் ஏராளமான திமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

பெண் விடுதலை தான் திராவிட இயக்கத்தின் உடைய அடிப்படை நோக்கம். சூத்திரர்களைப் போல பெண்களும் இழிவானவர்கள் என ஒடுக்கப்பட்ட காலத்தில் இந்த இருவர்களுடைய விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தார் பெரியார். திராவிட இயக்கத்துடைய தாய் அமைப்பான நீதிக் கட்சியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமண சட்டத்தை நிறைவேற்றினார். பெண்களுக்கு சம பங்கு உண்டு என்று கொடுத்தார் கலைஞர்.

இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு தான் அடித்துச் சொல்கிறேன். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.

பிரதமர் அவர்களே மணிப்பூரை மறந்து விட்டீர்களா..? 2023 ஆம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில் இதுவரை அரசு கணக்குப்படி பார்த்தால் 260 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு இருக்கும். 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளார்கள். ஒரு லட்சம் பேருக்கும் மேல் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளது இத்தனைக்கும் ஒன்றியத்தை ஆள்வது, மணிப்பூரை ஆண்டது இரண்டுமே பாஜக தான். ஆனால் உங்கள் டபுள் இன்ஜின் ஓட்டுனர் டப்பா இஞ்சின் ஏன் மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை. மணிப்பூர் முதலமைச்சர், அமைச்சர், எம்எல்ஏக்கள் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியிருக்கிறார்கள். மணிப்பூரை ஆண்ட பாஜகவால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, மணிப்பூரையும் உத்திரபிரதேசத்தையும் பாருங்கள், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பாஜக ஆளுகிற 2 மாநிலங்கள் மூலமாக தான் போதைப்பொருள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருகிறதே..? பத்திரிக்கைகளை நீங்கள் படிக்கவில்லையா…? இதை அனைத்தையும் மறைத்துவிட்டு அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள்.

ஏதோ புதிதாக கூட்டணியை உருவாக்கியது போல அவரும் தோல் உயர்த்துகிறார்கள். தோற்றுபோனக் கூட்டணியை புதுப்பித்து விட்டு பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் இருக்கிற அனைவருமே ஈடி, ஐடி, சிபிஐ என ஏதோ ஒரு வகையில் பாஜகவிடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் தங்களை வெலுக்காதா என்ற நப்பாசையில் கைகட்டி உட்கார்ந்து இருக்கிறார்கள். ஏற்கனவே இதே பாஜக அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அதிமுக, பாஜக ஆகியோர் மறைமுக கூட்டணியாக வந்தாலும், கெட் அவுட் தான் என்று தமிழக மக்கள் திரும்பத் திரும்ப சொல்லிவிட்டார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.