மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் லால். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
மோகன் லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லூசிபர் 2 ; எம்புரான், துடரும், ஹிருதயப்பூர்வம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தன.
இந்த நிலையில் மோகன்லாலின் 367வது திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைக் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இயக்குநர் விஷ்ணு மோகன் ’மேப்படியான்’, ’கத இன்னுவர’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
With immense joy, I announce my next project, #L367. I am truly delighted to collaborate with director Vishnu Mohan on this exciting venture, produced by Shri Gokulam Gopalan under the banner of Sree Gokulam Movies. Looking forward to this new chapter and seeking all your love,… pic.twitter.com/oCR7ZjKFqI
— Mohanlal (@Mohanlal) January 26, 2026








