முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாறுகிறது குடிசை மாற்று வாரியம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “குடிசையில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளை கருணாநிதி மக்களுக்கு கட்டிக் கொடுத்தார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் இத்திட்டத்தை பெரிதும் பாராட்டி பிற மாநிலங்களிலும் தமிழகத்தில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியதையும்” முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும். குடிசைகளை மட்டுமின்றி குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் தரத்தை மேம்படுத்தவும் இந்த பெயர் மாற்றம் செய்யப்படுகிறது” என முதலமைச்சர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan

”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”

Halley karthi

கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி செயல்படுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்

Ezhilarasan