முக்கியச் செய்திகள் இந்தியா

SBI வாடிக்கையாளர்களுக்கு இறுதி வாய்ப்பு

வாடிக்கையாளர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால கெடுவை மத்திய அரசு பலமுறை நீட்டித்து வரும் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், SBI அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வங்கி வசதியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அவ்வாறு இணைக்காவிட்டால், பான் கார்டு செல்லாது என அறிவிக்கப்படும் என்றும், இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் SBI ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்- பான் இணைப்பை onlinesbi.com இணையதளம் மூலமாகவும் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான காலக்கெடுவை, வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஏற்கனவே மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சரியான நேரத்தில் ஆதார்-பான் இணைக்காத வாடிக்கையாளர்கள், தாமதமாக இணைப்பதற்காக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
SHARE

Related posts

முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரி; 100வது பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!

Jayapriya

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Ezhilarasan

போலீசாரிடம் வாக்குவாதம்: வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Ezhilarasan