மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில்…

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் முருகன், தமிழ்நாட்டுக்கான இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர்கள் இணைந்தனர். அப்போது பேசிய மாநிலத் தலைவர் எல்.முருகன், முத்ரா, இலவச கேஸ், கிசான் போன்ற பிரதமரின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம்தான் என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பாஜகவில் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply