தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசனை வெளியிட்டுள்ளது.

அரசின் திட்டங்களை மக்களுக்கு உரிய வகையில் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, மக்கள் தொகை அடிப்படையில் ஏற்கனவே ஊராட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவடையும் போது 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.