”தமிழ்நாடு அரசு ரூ.12.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது! விரைவில் திவாலாகிவிடும்!” – பாளையங்கோட்டையில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

தமிழ்நாடு அரசு ரூ.12.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது, விரைவில் திவாலாகிவிடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி…

தமிழ்நாடு அரசு ரூ.12.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது, விரைவில் திவாலாகிவிடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடைப்பெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

நெல்லையில் 125 கிமீ பயணப்படும் தாமிரபரணி ஆறு மாசடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பதற்கான திட்டங்களை திராவிட கட்சிகள் மேற்கொள்வில்லை. இதே போல், நாங்குநேரி பொருளாதார சிறப்புமண்டலம், கங்கைகொண்டான் சிப்காட் போன்ற திட்டங்களால் தென்பகுதிகளில் எந்த ஒரு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை.

திமுக அரசு அண்ணாவின் கொள்கைகளை மறந்து விட்டு, 3 தலைமுறைகளை மதுவால்
அழித்துள்ளது. மதுக்கடைகளை 100 சதவீதம் மூடும் தைரியம் திராவிட கட்சிகளுக்கு
இல்லை. இந்தியாவின் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு அரசு மட்டும் ரூ.12.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. விரைவில் அரசு திவாலாகிவிடும்.

நெய்வேலியில் என்.எல்.சிக்காக கதிர் வந்த நெற்பயிர்களை அழித்த சம்பவத்தை
பார்த்து 2 நாட்கள் தூக்கம் வராமல் நான் மண்ணையும், விவசாயிகளையும்
காப்பதற்காக போராட்டத்தில் ஈடுப்பட்டேன்.

நெய்வேலியை மேற்குவங்கம், நந்திகிராமம் போல் ஆக்காமல் நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாமக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். நெய்வேலியில் நெற்பயிர்கள் அழிக்கப்படுவதை கருணாநிதி உயிரோடு இருந்து பார்த்திருந்தால் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த சொல்லியிருப்பார்.

இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால் இன்னும் 3
ஆண்டுகளில் தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வரும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.