இளைஞர்களின் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த தொழிலதிபர் யூசுப் அலி!

இளைஞர்களின் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அசத்திய தொழிலதிபர்  யூசுப் அலியின் செயலுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரும் செல்வந்தரும், தொழிலதிபருமான யூசுப் அலி, நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

இளைஞர்களின் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அசத்திய தொழிலதிபர்  யூசுப் அலியின் செயலுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பெரும் செல்வந்தரும், தொழிலதிபருமான யூசுப் அலி, நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவிடம் அமைந்துள்ள கோட்டயம் புதுப்பள்ளிக்கு சென்றார். அப்போது உம்மன் சாண்டி மறைவு குறித்து அவர் மகனிடம் துககம் விசாரித்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் வெளிநாடு திரும்புவதற்காக ஹெலிகாப்டர் தளம் அருகே சென்றார்.

அப்போது அவர் அருகே சென்ற இளைஞர்கள் தோளில் கை போட்டவாறு செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர். ஆனால் இளைஞர்களை அருகே அழைத்த யூசுப் அலி, அவர்களின் தோலில் கை போட்டவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து அசத்தினார்.அந்த கை அங்கேயே இருக்கட்டும்… கை வைத்தால் ஒன்றும் ஆகப்போறது இல்லை என்றும் அவர் கூறினார். அவரின் இந்த செயலை இளைஞர்கள் பாராட்டி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.