காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு!

காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாணமை ஆணியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர்.

இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்த விட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று தகவல் வெளியான நிலையில் இது தொடர்பா திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை டி.கே.சிவக்குமார், “காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழ்நாடு அர்சு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தர் சிரமமும் இருக்காது.

இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால். விகிதாச்சாரப்படி பில்லிருண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டியய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தாவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.

விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 26.954 டி.எம்.சி நீரைகர்நாடக அரசு அளிக்க தவறியதால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.