இந்தோனேஷியாவில் தமிழ்நாடு மீனவர்கள் கைது; முதலமைச்சர் கடிதம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ்…

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 8 மீனவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 22ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் சென்ற 33 மீனவர்கள், மார்ச் 7ஆம் தேதி செஷல்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி 8 மீனவர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய வெளியுறவுத்தறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு, இந்தோனேசியா மற்றும் ஷெசல்ஸ் நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த பிரச்னையை எடுத்து செல்ல வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.