திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சாலை காண்டிராக்டராக இருந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து வீட்டிலிருந்த 225 சவரன் நகைகள், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பத்திரப்பதிவு ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் ஆவடி காவல் துணை ஆணையர் மகேஷ் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த பிரவீன்குமார் டேனியல், நந்தகுமார், சிவமுருகன், பிரகாஷ், வினோத்குமார், கவிதா உள்ளிட்ட 9 பேரையும், திருவள்ளூரைச் சேர்ந்த வசந்தகுமார், செந்தில்வேலன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கைதான 12 பேரிடம் இருந்து 2 கார்கள் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர்களை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.