கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அந்நேரத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக திமுக ஆட்சிகாலத்தில் நியமித்து இருந்த முருகாநந்தம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்த சாய்குமார் ஏப்ரல் 8-ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அவரது பதவிக் காலம் 6 மாத காலம் நீட்டிப்பட்டுள்ளது.
யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்…?
சாய் குமார், 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தருமபுரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2018 முதல் 2022 வரை அவரின் முதன்மை தனிச் செயலாளராக சாய் குமார் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.




