அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்.பி. வேலுமணி & சி.வி. சண்முகம் தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. .
இதற்கிடையில் நேற்று எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபாரம்) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணந்தனர்.
மேலும் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




