கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.
இதனால் நேற்று இரவு சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கோவையில் காணாமல் போன சிறுமி, திருப்பூர் வெள்ளகோயில் பேருந்து நிலையத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்.







