“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழ் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் “மேகதாது திட்டத்தைத் தடுப்பதற்குத் தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை” என்று பேசி இருந்தார். இதற்கு தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழ் நாடு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், “மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம். தமிழ்நாடு அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். தமிழகத்தின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.