தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் – உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் #MKStalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள்…

mkstalin, cmotamilnadu

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று(17.09.2024) தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்குகீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படியுங்கள் : உலகின் 8வது அதிசயம் பிரதமர் மோடி! #Tirunelveli -ல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, அன்பில் மகேஸ், திமுக பொருளாளரும் மக்களவை திமுக தலைவருமான டி ஆர் பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி மற்றும் எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.