தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல்

பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசுமுறைப்பயணமாக அடுத்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுமுறைப்பயணமாக அடுத்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது..

அண்மைச் செய்தி: ‘’சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது’ – தமிழ்நாடு அரசு’

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால், தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் நலம் பெற்றவுடன் டெல்லி செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜூலை 19-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.