சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் முதலமைச்சர் கையால் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் பாராட்டத்தக்க வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கத் தமிழக அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி, விவசாயம், கால்நடை, கல்வி, குடிநீர் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் முதலமைச்சரால் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு தொழில் நிறுவனம் என மொத்தமாக 37 மாவட்டங்களில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘டி.என்.பி.எஸ்.சி; குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு’
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை தொடர்பாக நாம் சில வணிக நிறுவன உரிமையாளர்களிடம் கேட்டபோது, இது ஒரு நல்ல முன்னெடுப்பு, வணிக நோக்கோடு மட்டும் அல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட ஊக்குவிக்கும் ஒரு திட்டமாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.








