தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்குக் கூடும் அமைச்சரவை கூட்டத்தில், மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தல், ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் தொடர்பாகவும் முடிவு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய திட்டங்கள், நிறுவன விரிவாக்கங்கள், கொள்கைகளுக்கு அனுமதி, மகளிர் உரிமைத்தொகை அளிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘மூட்டு வலியா? இதை சாப்பிடுங்க… – சித்த மருத்துவர் அமுதா’
இந்த கூட்டத்தில், தகவல் பலகை மூலம் சிறப்பாகச் செயல்படும் துறைகள் குறித்த தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க இருப்பதாகவும், அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் மாற்றம் குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்காக துறை ரீதியாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








