இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் Vocational course படித்தவர்களுக்கு 2% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பள்ளி முடித்துவிட்டு பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கமே இருக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார் எனவும், இந்த ஆண்டிலிருந்து பாலிடெக்னிக் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் அண்ணா பல்கலையிலும் பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்படுவர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், Vocational course படித்தவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இருக்கும் உறுப்புக் கல்லூரிகளில் 2% சேர்த்துக்கொள்ளப்படுவர் எனவும், எல்லா மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல, ரூ 1,000 உதவித்தொகைக்காக முதல் நாளிலேயே 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், மாணவிகளுக்கான திட்டத்தை ஜூலை மாதத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார் என்றார். ஜூலை 18 ஆம் தேதி எல்லா கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும், மாணவிகளுக்கான உதவித்தொகை ரூ.1,000 மூலம் அவர்களின் உயர்கல்வி பொற்காலமாக அமையும் என தெரிவித்தார்.








