முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள் 5 பேருக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க தமிழகத்தில் இருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர்.அவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ​தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகையையும் தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள தடகள வீரர், வீராங்கனைகளான எஸ். ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலஷ்மி சேகர் மற்றும் ரேவதி வீரமணி ஆகிய 5 பேருக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாகத் தலா 5 லட்ச ரூபாய் வீதம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ஏற்கனவே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு தலா 5 லட்சம் வீதம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

Halley karthi

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் – விஜய் வசந்த் வாக்குறுதி!

Gayathri Venkatesan

ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள்: தலா ரூ.5லட்சம் வழங்கிய அமைச்சர்

Vandhana