7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

 தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி…

 தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.