டோக்கியோவில், ஜப்பான் தம்பதியினர் தங்களின் இனிப்பகத்திற்கு தமிழில் பெயர் வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று சர்வதேச தாய்மொழி தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாய்மொழி மீது பலருக்கும் பற்று இருப்பது வழக்கம். அதையும் தாண்டி, சிலருக்கு தாய்மொழி தவிர்த்த பிற மொழிகள் மீது அதீத விருப்பம் ஏற்படுவதையும் ஆங்காங்கே நம்மால் காண முடியும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகத்தின் மூத்த மொழியாக கொண்டாடப்படும் தமிழ், பிற மாநிலத்தவரை மட்டுமல்லாமல், வெளிநாட்டினரையும், பல்வேறு அறிஞர்களையும், பல விதங்களில் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இதையும் படியுங்கள் : ராணுவ வீரர் கொலை விவகாரம் – உள்துறை அமைச்சரை சந்திக்கிறார் அண்ணாமலை?
தனக்கே உரிய தனிச்சிறப்புகள் பலவற்றைக் கொண்டுள்ள தமிழ் மொழி மீது பெருவிருப்பம் கொண்ட பல வெளிநாட்டினர், தமிழ் பாடல்களை பாடுவது, தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுவது, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதை சமூக ஊடகங்களின் வாயிலாக பார்க்க முடிகிறது.
அந்த வகையில், ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில், தமிழ் மீது பற்று கொண்ட ஜப்பானிய தம்பதியினர், தங்களது இனிப்பகத்திற்கு, ‘இனிப்பும் இருக்கும்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தியாவின் பாரம்பரிய மசாலாப் பொருட்கள் மற்றும் வெல்லத்தை பயன்படுத்திவரும் அவர்கள், தென்னிந்திய உணவகம் ஒன்றையும் டோக்கியோவில் நடத்தி வருகின்றனர்.
இனிப்பகத்தில் இருக்கும் பெயர்ப்பலகையின் புகைப்படத்தை, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது, ஜப்பானிய தம்பதியின் தமிழ் பற்றை பாராட்டியுள்ளார்.