திருப்பூரில் கடையின் உரிமையாளளரை தாக்கிய காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவில் நியூஸ்7 செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னக்கரை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஜூஸ் குடித்ததற்காக பணம் கேட்ட கடை ஊழியரை காவலர் பாண்டியன் தாக்கிய சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளுடன் நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காவலர் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவில் நியூஸ்7 செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டு மடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லடம் அருகே சின்னக்கரையில் ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று சின்னக்கரை சோதனை சாவடியில் பணிபுரிந்து வரும் பல்லடம் காவல் நிலைய தலைமை காவலர் பாண்டியன் என்பவர் ஜூஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.
அப்போது கடைக்காரர் சுரேஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் வாங்கிய ஜூஸுக்கு இன்னும் பணம் வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் பாண்டியன் சுரேஷை தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் காவலர் பாண்டியனை தடுத்து அனுப்பிவைத்துள்ளனர். காவலர் பாண்டியன் தாக்கியதில் சுரேஷ் படுகாயம் அடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் காவலர் பாண்டியன் ஜூஸ் கடை சுரேஷை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர், ஜூஸ் கடையின் உரிமையாளரான சுரேஷை தாக்கும் சிசிடிவி காட்சிகளுடன் நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவலர் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவில் நியூஸ்7 செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.








