ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் சேனல்களில் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தலிபான் தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர்
தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானியர் களும் தலிபானின் அடக்குமுறைகளுக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின் றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள்
குவிந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை வெளியேற்றி இருப்ப தாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டில் உள்ள பெண்கள் அதிக பயத்தில் உள்ளனர். பெண்கள் தங்கள் வேலைகளைத் தொடரலாம், அவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது, ஆனால், இஸ்லாமிய சட்டப்படியே அது இருக்கும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தாலும் முந்தைய ஆட்சியில் அவர்கள் பெண்களை நடத்திய விதம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பத்திரிகை மற்றும் மீடியாவில் பணியாற்றும் பெண்கள் வேலைக்கு செல்வதற்குத் தலிபான்கள் தடை விதித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இநிலையில், இப்போது கந்தகாரில், டி.வி.சேனல்களில் பாடல்கள் ஒளிபரப்பு வதற்கும் பெண்கள் தோன்றுவதற்கும் ரேடியோக்களில் பெண் குரல்களை ஒலிபரப்பவும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த முறை தலிபான்களின் ஆட்சியின்போது, ஜிகாப் அணியாத பெண்களுக்கும் குடும்ப ஆண்கள் இல்லாமல் தனியாக வரும் பெண்களுக்கும் அவர்கள் கொடுத்த கடுமையான தண்டனைகள் உலகம் முழுவதும் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.