மியூசியம் ஆகிறது முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடு

முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடு மியூசியமாகவும் அவருடைய கிராமம் சுற்றுலாத்தளமாகவும் மாற்றப்பட இருக்கிறது. இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்றவர் நரசிம்மராவ். இவர், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை…

முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடு மியூசியமாகவும் அவருடைய கிராமம் சுற்றுலாத்தளமாகவும் மாற்றப்பட இருக்கிறது.

இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்றவர் நரசிம்மராவ். இவர், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமரான இவர், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர்.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள இவரது கிராமமான வங்காரா, சுற்றுலத்தளமாக மாற்றப்பட இருக்கிறது. அங்குள்ள அவருடைய பூர்வீக வீடு மியூசிய மாக்கப்படுகிறது. நரசிம்மராவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, இதை செய்வதாக அந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வி.ஸ்ரீனிவாஸ் கவுட் தெரிவித்திருந்தார்.


அதன்படி இப்போது அதற்கான பரிந்துரைக்கப்பட்ட, திட்ட வரைபடத்தை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நரசிம்மராவின் பூர்வீக வீட்டில், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.

இதுபற்றி நரசிம்மராவின் மகள் சுரபிவாணி தேவி கூறும்போது, தனது தந்தை 15 ஆயிரம் புத்தகங்களை வைத்திருந்ததாகவும் அவற்றில் சில ஐதராபாத்தில் உள்ள ரமனானந்த தீர்த்த நினைவு அறக்கட்டளையும் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தகங்களில் சில மியூசியத்தில் வைக்கப்படும் என்றும் 1986 ஆம் ஆண்டு ராவின் மகன் அவருக்கு அனுப்பிய கம்யூட்டர், டைப் ரைட்டர், அவருக்கு பிடித்த சேர் உள்ளிட்டவை அதில் இடம்பெற உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.