#T20W – இந்தியாவுக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா அணி!

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 152 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்…

#T20W - Australia set a target of 152 runs for India!

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 152 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று (அக். 13) இரவு சார்ஜாவில் நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனே 2 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜார்ஜியா வராஹம் டக் அவுட் ஆனார். பின்னர் கிரேஸ் ஹாரிஸ், தஹிலா மெக்ராத் இருவரும் சிறப்பாக விளையாடினர். கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், தஹிலா மெக்ராத் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெரி 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் இந்தியா விளையாடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.