டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகிறது.

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் சுற்று முடிவில் தென்ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியை எட்டின. முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை பந்தாடி 2-வது தடவையாகவும், இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாகவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகிறது. இறுதியுத்தத்தை காண, ஆமதாபாத் மைதானத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் ரசிகர்கள் திரளுவார்கள். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைக்கக் காத்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.